8. இது தான் காதலா!

Jul
17,
2009





மின்னலாய் வந்தான் -என்
மனதை ஊடுறுவிச் சென்றான்.
அந்த நாள் மறைந்தது - ஆனால்
அவன்
முகம் மட்டும் மறையவில்லை.


- இது தான் காதலா!





என் போக்கில் வாழ்ந்த என்னை
மனப்போக்கில் வாழ வழிவகுத்தவனே!
இன்னும் ஏன் வாய் பேச மறுக்கின்றாய்?





நான்
உன் கண் பார்க்க - நீயோ
மண் பார்க்கின்றாய்!
நீ என் கண் பார்க்க - நானோ
மண் பார்க்கின்றேன்!
இப்படி இருவரும் மண் பார்த்தால்- என்று தான்
நம் மனம்(மணம்) பார்ப்பது!

7. பாலிசைட்டரிக் ஒவரியன் சின்றோம்(PCOS)....,

Jul
2,
2009


பாலிசைட்டரிக் ஒவரியன் சின்றோம்(PCOS)....,
இன்று பெண்களுக்கு பரவலாக காணப்படும் பாலிசைட்டரிக் ஒவரியன் சின்றோம், வரக் காரணம் அறிய படாமல் இருந்தாலும் , அதைப் பற்றிய சில தகவல்கள்...,

இந்தியர்களுக்கு சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் அதிகமாக வருவது அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும், பாலிசைட்டரிக் ஒவரியன் சின்றோம் வருவதற்கும் , இவைகள் காரணம் என்று மருத்துவ உலகம் உறிதிப்படுத்துக்கிறது. இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் குறைப்பாடு.


பொதுவாக நமது உடலில் உள்ள சர்க்கரை தான் ஆற்றலாக பயன்படுக்கிறது. ஆனால் சர்க்கரையின் அளவில் மாறுதல் காரணம்மாக Pcos வருக்கிறது.பொதுவாக சர்க்கரை மாறுதல் மட்டும் காரணம் அல்ல. சில நபர்க்களுக்கு பரம்பரைக் காரணம்மாகவும் வரலாம்.

பெண்களில், சிலருக்கு உடலில் ஹார்மோன் மாறுதல் ஏற்படுவதால், பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடும். பல சமயங்களில் ovulation நடைப் பெறுவது நின்று விடுக்கிறது. இதனால் குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது பெண்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பதினைந்து பெண்களில் ஒருவருக்கு இந்த குறைப்பாடு ஏற்படுக்கிறதாம். பதினைந்து வயது முதல் நாற்ப்பது வயதில் உள்ள பெண்ககளுக்கு அதிகம்மாக காணப்படுக்கிறது.

அறிக்குறிகள்:

* மாதவிடாய் நின்று விடுவது.
* உடல் எடை கூடுவது.
* முகத்தில் பருக்கள் அதிக்கமாதல்.
* மன அழுத்தம்.
* முகத்தில் அதிக முடி வளர்ச்சி.

இதுப் போன்ற அறிகுறிகள் உங்களில் யாருக்கேனும் இருக்குமாயின் மருத்துவரிடம் செல்லவும்.


சிகிச்சை முறைகள்:

சிக்கிச்சை முறைக்கள் ஒவ்வொரு நபருக்கும் மாறுப்படும்.

அவற்றில் சில,

* Metformin

இந்த மாத்திரை, முதலில் பரிந்துரைக்கப்படும். இது Type 2 டியாபெடேஸ் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும். உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த மாத்திரை பயன்படுகிறது. பொதுவாக நமது உடலில் உள்ள சர்க்கரை தான் ஆற்றலாக பயன்படுக்கிறது. ஆனால் சர்க்கரையின் அளவில் மாறுதல் காரணம்மாக Pcos வருக்கிறது.


Pcos ல் குழந்தை பெற இரண்டு முறைகள் கையாளப்படுக்கின்றன


1.IUI(Intrauterine insemination)

2. IVF(In Vitro Fertilization)



IVF Procedure:


6.வான்வெளிப் பயணங்கள்

Apr
9,
2009








ஒரு நாளைக்கு, அதாவது 24-மணி நேரத்தில் வான்வெளியில் நடைபெறும் விமான போக்குவரத்துக்களை Geo-stationary orbital satellites வாயிலாக எடுக்கப்பட்ட படம் உங்கள் பார்வைக்கு!!!
அதோடு பகல், இரவு மாற்றங்களையும் கவனியுங்கள்!!!








இன்னும் சில நாட்களில், வான்வெளியில் Traffic police officer இருந்தாலும் ஆச்சரியம் பட ஒன்னும் இல்லை :) (ஒசோன்-ல இல்லீங்க, பூமியில கூட ஒட்ட விழலாம், ஆச்சரியம் இல்லை).

5.ஒட்டகத்த பாத்துக்கோ!!!

Apr
8,
2009

இந்த படத்தில் உள்ள ஒட்டகத்தை முதலில் பார்க்கவும்..,



(படத்தின் மீது கிளிக் செய்யவும்)


என்ன படத்த நல்லா பாத்தீங்களா? படத்தில் எத்தனை ஒட்டகம் உள்ளது????















அட, மேலே கேட்ட கேள்விக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்க..சும்மா build up-ங்க.......,

இந்த படத்தில் வெள்ளை நிறத்தில் தெரியிது பாருங்க அது தாங்க ஒட்டகம்.
கறுப்பா தெரியிரது ,அதோட பிம்பம்...,(ஒட்டகத்தை முதலிலே,கண்டுப்பிடிக்காதவங்க நல்ல கண் மருத்துவரை பார்க்கவும்-----உங்கள் நலன் விரும்பி!!!!)

4.என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்...Andrew Zimmern.

Apr
6,
2009


என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்........
(அட நான் இல்லீங்க).Travel channel-ன்னு ஒன்னு இருக்குங்க.அதுல செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு bizarre food-ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும்.அதுல என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்னு ஒருத்தர் சாப்பிடுவார் பாருங்க...(இளகிய மனது உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்).பறக்குறதுல விமானம்,நீந்துறதுல கப்பல தவிர மத்த எல்லாத்தையும் சாப்பிடுவார்.bizarre உணவு என்பதால்,மக்கள் சாப்பிடும் weird-ஆன உணவை தேடிப்பிடிச்சு சாப்பிடுவார்.
அவர் உண்ணும் உணவில் பாம்பு, முதலை, கழுதை, நத்தை, ஆமை, தேள், பல்லி, சிலந்தி, கரப்பான் பூச்சி(இன்னும் பெயர் தெரியாத பூச்சிகள்), பன்றி மற்றும் மாட்டின் மூளை,குளம்பு. இதுவாது பரவாயில்லை,மேலே சொன்னது அனைத்தையும் சமைத்து சாப்பிட்டார்.சமைக்காது சாப்பிடும் உணவுகள் தான் ஏராளம்.துடிக்கும் மீன்,தவளையின் இதயம்,100-நாள் ஆன அழுகிய வாத்து முட்டை,மாட்டின் நாக்கு..,இன்னும் ஏராளம்.
இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது.அவர்களை ஒரு முறை நிகழ்ச்சிக்கு அழைத்து எல்லோருக்கும் பூச்சி,மூளை,இரத்தம் ஆகியவற்றை விருந்தாக அளித்தார்.
அவரின் தாரக மந்திரம் if it looks good,eat it என்பது தான்.
நீங்களும் ஒரு sample பாருங்களேன்!!!



3.படித்ததில் பிடித்தது...,

Apr
4,
2009


உன்னுடைய இனிய தொலைபேசி
தொடர்பை துண்டித்து விட்டேன்!!!






உன்னுடைய இனிய

தொலைபேசி தொடர்பை
துண்டித்து விட்டேன்
துடித்தது என் இதயம்
துயரம் தாங்காமல்
விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
விடிந்தபின் பேசவும்
ஆசையாகதான் உள்ளது
என்ன நான் செய்ய
விடியுமா நம் வாழ்வு
இப்படியே தொடர்ந்தால்
இதயத்தை கல்லாக்கவில்லை
மாறாக அது இன்று
இரத்த கண்ணீரை
உள்ளே வடிக்கிறது
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
நீ தாங்கமாட்டாய்
உனக்காக தான் நான்
உணர்வுகளுக்கு திரையிட்டு
உடனே துண்டிகிறேன்
ஊமையாய் செல்கிறேன்
ஊயிரே மன்னித்துவிடு


இதை என்னோட கவிதைன்னு சொல்ல ஆசைத்தான்..,என்ன செய்ய நான் எழுதலயே:)))

பின் குறிப்பு:
மூன்று post-போட்டாதான் உள்ள வரமுடியும் அதான்....(இப்பவே கண்ண கட்டுதே!!!!).


2. குழந்தையின் சிரிப்பில்...

குழந்தையின் சிரிப்பு, இசையை ரசிக்காதவர் ஒருவரும் இல்லை. இவை இரண்டும் இணைந்தால்..
ஹி ..ஹி..ஹி.,(என்ன எல்லாம் பண்ணுறாங்க ....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)

1. வணக்கம்...




இதுதான் என்னுடைய முதல் (மொக்கை)பதிவு..,

எவ்வளவு நாள் தான் அடுத்தவங்க மொக்கைய படிக்கிறது(நல்ல பதிவர்கள சொல்லலைங்கோ:))) அதான் நானும் கொஞ்சம் மொக்கை போடலாம்முன்னு கிளம்பிட்டேன்:))) . இப்ப எல்லாம்,இது என்னோட போன் நம்பர் , இமெயில்-னு சொல்லுற மாதிரி இது என்னோட ப்ளாக்குன்னு சொல்லுறானுங்க.., அதான் நானும் மத்தவங்க கிட்ட கொடுக்கலாமுன்னு..,


என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு படிக்க வந்தவங்கங்களுக்கு என்னோட நன்றி.