3.படித்ததில் பிடித்தது...,


உன்னுடைய இனிய தொலைபேசி
தொடர்பை துண்டித்து விட்டேன்!!!


உன்னுடைய இனிய

தொலைபேசி தொடர்பை
துண்டித்து விட்டேன்
துடித்தது என் இதயம்
துயரம் தாங்காமல்
விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
விடிந்தபின் பேசவும்
ஆசையாகதான் உள்ளது
என்ன நான் செய்ய
விடியுமா நம் வாழ்வு
இப்படியே தொடர்ந்தால்
இதயத்தை கல்லாக்கவில்லை
மாறாக அது இன்று
இரத்த கண்ணீரை
உள்ளே வடிக்கிறது
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
நீ தாங்கமாட்டாய்
உனக்காக தான் நான்
உணர்வுகளுக்கு திரையிட்டு
உடனே துண்டிகிறேன்
ஊமையாய் செல்கிறேன்
ஊயிரே மன்னித்துவிடு


இதை என்னோட கவிதைன்னு சொல்ல ஆசைத்தான்..,என்ன செய்ய நான் எழுதலயே:)))

பின் குறிப்பு:
மூன்று post-போட்டாதான் உள்ள வரமுடியும் அதான்....(இப்பவே கண்ண கட்டுதே!!!!).


11 Comments:

ஆ.ஞானசேகரன் said...

வாங்க இளமாயா... உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். இந்த உலகில் சாதனைகளுடன் வெற்றி பெறுங்கள்

இளமாயா said...

வருகைகும், வாழ்த்துக்கும் மிக நன்றி.

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான கவிதை.

இளமாயா said...

நன்றி வணாங்காமுடி அண்ண..,

Anonymous said...

கவிதை,,,,,,,

இளமாயா said...

நன்றி...புகழினி.

thevanmayam said...

ன்ன நான் செய்ய
விடியுமா நம் வாழ்வு
இப்படியே தொடர்ந்தால்
இதயத்தை கல்லாக்கவில்லை
மாறாக அது இன்று
இரத்த கண்ணீரை
உள்ளே வடிக்கிறது
வாய்திறந்து பேசவில்லை///

வருக வருக!!!

Dr.Deva

இய‌ற்கை said...

வாங்க இளமாயா... உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்

இளமாயா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

thevanmayam said...

இளமாயா!
நான் முதல் நபராக உங்களை பின் தொடருகிறேன்!
மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்!

இளமாயா said...

நன்றி தேவா.,உங்கள் பதிவுகள் எனக்கும் பிடிக்கும்.நல்ல பயன் தரும் வகையில் உள்ளது.,உங்கள் பணி சிறக்க
என் வாழ்த்துக்கள்.