4.என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்...Andrew Zimmern.


என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்........
(அட நான் இல்லீங்க).Travel channel-ன்னு ஒன்னு இருக்குங்க.அதுல செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு bizarre food-ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும்.அதுல என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்னு ஒருத்தர் சாப்பிடுவார் பாருங்க...(இளகிய மனது உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்).பறக்குறதுல விமானம்,நீந்துறதுல கப்பல தவிர மத்த எல்லாத்தையும் சாப்பிடுவார்.bizarre உணவு என்பதால்,மக்கள் சாப்பிடும் weird-ஆன உணவை தேடிப்பிடிச்சு சாப்பிடுவார்.
அவர் உண்ணும் உணவில் பாம்பு, முதலை, கழுதை, நத்தை, ஆமை, தேள், பல்லி, சிலந்தி, கரப்பான் பூச்சி(இன்னும் பெயர் தெரியாத பூச்சிகள்), பன்றி மற்றும் மாட்டின் மூளை,குளம்பு. இதுவாது பரவாயில்லை,மேலே சொன்னது அனைத்தையும் சமைத்து சாப்பிட்டார்.சமைக்காது சாப்பிடும் உணவுகள் தான் ஏராளம்.துடிக்கும் மீன்,தவளையின் இதயம்,100-நாள் ஆன அழுகிய வாத்து முட்டை,மாட்டின் நாக்கு..,இன்னும் ஏராளம்.
இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது.அவர்களை ஒரு முறை நிகழ்ச்சிக்கு அழைத்து எல்லோருக்கும் பூச்சி,மூளை,இரத்தம் ஆகியவற்றை விருந்தாக அளித்தார்.
அவரின் தாரக மந்திரம் if it looks good,eat it என்பது தான்.
நீங்களும் ஒரு sample பாருங்களேன்!!!2 Comments:

புல்லட் பாண்டி said...

கிக்கி! டிபெரெண்டான பொம்பளயா இருக்கீங்களே?எனிவே ஐ லைக் இட்...

அன்ட்வன் மோ திங் டு சே..

குட் டேஸ்ட் :)

இளமாயா said...

//குட் டேஸ்ட்//

நீங்களும் சுவைத்துப் பார்த்தீங்களா????

:)