8. இது தான் காதலா!

மின்னலாய் வந்தான் -என்
மனதை ஊடுறுவிச் சென்றான்.
அந்த நாள் மறைந்தது - ஆனால்
அவன்
முகம் மட்டும் மறையவில்லை.


- இது தான் காதலா!

என் போக்கில் வாழ்ந்த என்னை
மனப்போக்கில் வாழ வழிவகுத்தவனே!
இன்னும் ஏன் வாய் பேச மறுக்கின்றாய்?

நான்
உன் கண் பார்க்க - நீயோ
மண் பார்க்கின்றாய்!
நீ என் கண் பார்க்க - நானோ
மண் பார்க்கின்றேன்!
இப்படி இருவரும் மண் பார்த்தால்- என்று தான்
நம் மனம்(மணம்) பார்ப்பது!

6 Comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னங்க? ரொம்ப நாளா ஆளே காணோம்? கவிதை நல்லா இருக்கு..

Maximum India said...

இது தான் காதலா? :-)

இளமாயா said...

Thanks karthik..,
காத்திரு வருவேன்! :)

இளமாயா said...

இது தான் காதலா? :-)
//
அப்படி தானு வச்சுகங்க.
ரொம்ப Question கேட்டீங்க
அழுதுடுவேன்:)

murugesan said...

மண்ணைப் பார்த்தது போதும்.. உங்கள் இருவரையும் உங்கள் அப்பா பார்த்துவிடப் போகிறார்.... :)


நன்றாக இருந்தது...

Anonymous said...

rombha nalla irunthuchu