மின்னலாய் வந்தான் -என்
மனதை ஊடுறுவிச் சென்றான்.
அந்த நாள் மறைந்தது - ஆனால்
அவன் முகம் மட்டும் மறையவில்லை.
- இது தான் காதலா!
என் போக்கில் வாழ்ந்த என்னை
மனப்போக்கில் வாழ வழிவகுத்தவனே!
மனப்போக்கில் வாழ வழிவகுத்தவனே!
இன்னும் ஏன் வாய் பேச மறுக்கின்றாய்?
நான் உன் கண் பார்க்க - நீயோ
மண் பார்க்கின்றாய்!
நீ என் கண் பார்க்க - நானோ
மண் பார்க்கின்றேன்!
இப்படி இருவரும் மண் பார்த்தால்- என்று தான்
நம் மனம்(மணம்) பார்ப்பது!

